கடலூர், ஜூலை 9: கடலூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட இளைஞரணி அலுவலகத்தை, அண்மையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் திறந்து வைத்தார்.
÷செம்மண்டலம் ஸ்டேட் பாங்க் காலனியில் இவ்வலுவலகம் திறக்கப்பட்டு உள்ளது. நிகழ்ச்சிக்கு, நகராட்சி துணைத் தலைவரும், இளம்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை மாநில துணைச் செயலருமான தாமரைச்செல்வன் தலைமை தாங்கினார்.
÷மாநில பொதுச் செயலர் முன்னாள் எம்.எல்.ஏ. துரை. ரவிக்குமார், மாநில நிர்வாகிகள் பன்னீர்செல்வம், திருமார்பன், பாவாணன், மாவட்ட நிர்வாகிகள் பால.அறவாளி, புகழேந்தி, ரகு, காத்தவராயன், கிட்டு, பாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.