வீரபாண்டி ஸ்ரீஅதூல்ய நாதேஸ்வரர் கோயில் குடமுழுக்கு

திருக்கோவிலூர், ஜூலை 9:  திருக்கோவிலூர் அருகே வீரபாண்டி கிராமத்தில் அமைந்துள்ள சௌந்தர்ய கனகாம்பிகை ஸ்ரீஅதூல்ய நாதேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை வெகுவிமரிசையாக நடைபெறுகிறது. ÷இக்கோயில்
Published on

திருக்கோவிலூர், ஜூலை 9:  திருக்கோவிலூர் அருகே வீரபாண்டி கிராமத்தில் அமைந்துள்ள சௌந்தர்ய கனகாம்பிகை ஸ்ரீஅதூல்ய நாதேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை வெகுவிமரிசையாக நடைபெறுகிறது.

÷இக்கோயில் 800 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான சிவாலயமாகும். இக்கோயில் நுழைவு வாயிலில் கருங்கற்களால் புதிதாக குடவரை வாசல் அமைத்து, அதன் மீது 42 அடி உயரத்தில் கோபுரம் உள்ளது.

÷இவ்வளவு சிறப்பு வாய்ந்த ராஜகோபுரம் பெருமனம் கொண்ட அருளாளர்களின் நிதியினால் புதிதாக அமைக்கப் பெற்றும், மூலவர் அதூல்யநாத பெருமானின் சன்னதியை முழுவதும் இடித்து அகற்றி, புதிதாக மூன்று நிலை விமானம் அமைத்தும், நால்வர் வீரபத்திரருக்கு தனிச் சன்னதிகள் அமைக்கப் பெற்றும், ஆலயத்தில் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அதை நிறைவு செய்து இறை அருளால் திருக்குட நன்னீராட்டு பெருஞ்சாந்திப் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை காலை 9.10 மணி முதல் 10.50 மணிக்குள் நடைபெறுகிறது. இதையடுத்து சனிக்கிழமை காலை 7 மணிக்கு நூதன பிம்பங்கள் அஷ்டாதசக்ரியை கரிகோல ஊர்வலமும், 8 மணிக்கு ஆச்சார்யர்கள் விஷேஷசந்தி மற்றும் பாவனாபிஷேக தீபாராதனை நடைபெற்றது.

÷அதைத் தொடர்ந்து 8.30 மணிக்கு நான்காம் கால யாக வேள்வி தொடங்கியது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை மாவட்ட இணை ஆணையர் சி.தங்கராஜீ, உதவி ஆணையர் இரா.ரகுநாதன், ஆய்வாளர் பி.செண்பகவள்ளி ஆகியோர் மேற்பார்வையில், திருப்பணிக் குழுத் தலைவர் சி.குப்புசாமிராஜா, பரம்பரை அறங்காவலர் எ.திருஞானசம்பந்த சிவாச்சார்யார் மற்றும் அறங்காவலர்கள், கிராம பொதுமக்கள் முன்னின்று செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்