காஞ்சிபுரம், ஜூலை 9: காஞ்சிபுரத்தில் ஈஷா யோகா மையம் சார்பில் யோகா பயிற்சி வகுப்புகள் ஜூலை 21-ம் தேதி முதல் நடைபெறுகின்றன.
÷இதற்கு முன்னால் ஜூலை 20-ம் தேதி அறிமுக உரையுடன் கூடிய முதல்நாள் வகுப்பு நடைபெறும்.
÷ஜூலை 21-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. காலை 6 மணி முதல் 9 மணிவரை, பகல் 10 மணி முதல் 1 மணிவரை, மாலை 6 மணி முதல் 9 மணிவரை பயிற்சி வகுப்புகளுக்கான நேரம் திட்டமிடப்பட்டுள்ளது.
÷இவைகளில் ஏதேனும் ஒரு நேரத்தை தேர்வு செய்து விரும்புபவர்கள் பயிற்சி எடுத்துக் கொள்ளலாம். நினைவாற்றல், மனம் குவிப்புத்திறன், முடிவெடுக்கும் திறன் ஆகியவை குறித்து பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
÷இப் பயிற்சி வகுப்பில் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பங்கேற்கலாம் என்று காஞ்சிபுரம் ஈஷா யோகா மையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.