உத்தரமேரூர், ஜூலை 14: உத்தரமேரூரில் இருந்து செங்கல்பட்டு, தாம்பரம், பிராட்வே செல்லும் தடம் எண் 504-ஐ தொடர்ந்து இயக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
÷தடம் எண் 504 உத்தரமேரூரிலிருந்து பிராட்வேக்கு கடந்த பல மாதங்களாக சென்றுக் கொண்டிருந்தது.
÷இந்நிலையில் சில நாள்களாக இப்பேருந்து சரிவர வருவதில்லை. தொடர்ந்து செல்லும் நிலையிலிருந்து மாறுபட்டு வேறு வழியாக பேருந்து செல்வதாகவும், இரண்டு முறை சென்னை- உத்தரமேரூர் வந்து செல்லும் தடம் எண் 504 வேறொரு ஊருக்கு செல்வதாகவும் தெரிகிறது.
÷உடனடியாக இப்பேருந்து சென்னையிலிருந்து உத்தரமேரூருக்கு மட்டும் சரிவர தொடர்ந்து இயக்க அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.