"என்.எல்.சி.யில் உலர் சாம்பல் ஒதுக்கீட்டை முறைபடுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்'

நெய்வேலி, ஜூலை 14: என்.எல்.சி. நிறுவனத்தின் அனல்மின் நிலையங்களிலிருந்து உற்பத்தியாகும் உலர் சாம்பலை சிறுதொழில் நிறுவனத்தினருக்கு பயன்படும் வகையில் உலர் சாம்பல் ஒதுக்கீட்டை முறைப்படுத்த வேண்டும் என்று
Published on
Updated on
1 min read

நெய்வேலி, ஜூலை 14: என்.எல்.சி. நிறுவனத்தின் அனல்மின் நிலையங்களிலிருந்து உற்பத்தியாகும் உலர் சாம்பலை சிறுதொழில் நிறுவனத்தினருக்கு பயன்படும் வகையில் உலர் சாம்பல் ஒதுக்கீட்டை முறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி நெய்வேலி உலர் சாம்பல் செங்கல் உற்பத்தியாளர்கள் என்.எல்.சி. தலைமை அலுவலகம் எதிரே வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

÷நெய்வேலி அனல்மின் நிலையங்களிலிருந்து கிடைக்கும் உலர்சாம்பலைக் கொண்டு, நெய்வேலி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் சாம்பல் செங்கற்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகின்றனர்.

÷இதன்மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதோடு, களிமண்ணை பயன்படுத்துவதும் தவிர்க்கப்பட்டு வந்தது. ÷என்.எல்.சி. நிறுவனமும், உலர்சாம்பலை நீரோடு கலந்து வெளியேற்றுவதைக் காட்டிலும், இதுபோன்று சாம்பல் செங்கல் தயாரிக்கும் நிறுவனத்தைச் சேர்ந்தவர்களுக்கு சாம்பல்களை வழங்கி வந்தது.

÷இதற்காக அனல்மின் நிலையங்களில் இருந்து கிடைக்கும் உலர் சாம்பலில் 20 சதவீதத்தை நெய்வேலியைச் சுற்றியுள்ள சிறுதொழில் உற்பத்தியாளர்களுக்கு வழங்கிவந்தது. ÷இந்நிலையில் உலர் சாம்பலில் ஒதுக்கீட்டில் என்.எல்.சி. நிர்வாகம் சில திருத்தங்களை செய்ததாகக் கூறப்படுகிறது. ÷இந்த திருத்தத்தால் தங்களின் சாம்பல் செங்கல் தயாரிக்கும் தொழில் பாதிக்கப்படுவதாகக் கூறிவந்தனர்.

÷இது தொடர்பாக நிர்வாகத்திற்கும் கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர். ÷இருப்பினும் நிர்வாகம் சாம்பல் செங்கல் உற்பத்தியாளர்களின் கோரிக்கைக் குறித்து எவ்வித பதிலும் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

÷இந்நிலையில் நெய்வேலி சாம்பல் செங்கல் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் என்.எல்.சி. தலைமை அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.÷இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கச் செயலர் கே.துரைராஜ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது, மாவட்ட ஆட்சியர் மற்றும் நெய்வேலி எம்.எல்.ஏ. முன்னிலையில் உலர்சாம்பல் ஒதுக்கீட்டை முறைப்படுத்த வேண்டும்.

÷என்.எல்.சி. அதிகாரிகளின் அலட்சியத்தால் கடந்த 6 மாதமாக உலர் சாம்பல் ஏரியில் கரைக்கப்படுகிறது. ÷இதுபோன்று ஏரியில் கலப்பதை தவிர்த்து அந்த சாம்பலை எங்களைப் போன்று சிறு தொழில் நிறுவனத்தாருக்கு வழங்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தினர்.

÷ஆர்ப்பாட்டத்தில், சாம்பல் செங்கல் உற்பத்தியாளர் சங்கத்தைச் சேர்ந்த 20 பேர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.