உளுந்தூர்பேட்டை, ஜூலை 14: உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ சங்கரலிங்க சுவாமிகளின் 14-ம் ஆண்டு குருபூஜை பெருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவில் உலக அமைதி, நாட்டின் வளர்ச்சி, தனிமனிதன் முன்னேற்றம் வேண்டி வேள்விகளும், 1008 திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது. விழாவுக்கு ஸ்ரீராமகிருஷ்ணா ஆசிரமத் தலைவர் ஸ்ரீமத் அனந்தானந்தஜி மகராஜ் தலைமை வகித்தார். அன்னை சித்தர் எஸ்.ராஜ்குமார் சுவாமிகள், ஆத்தூர் விவேகானந்த சுவாமிகள், கொல்லிமலை கொங்கனூர் பூஉலக சுவாமிகள், பெரம்பலூர் சிவா சுவாமிகள் கலந்துகொண்டனர்.
இந்த குரு பூஜை பெருவிழாவில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கலந்துகொண்டு ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கி, வேட்டி - சேலை மற்றும் போர்வைகளை வழங்கினர்.
உளுந்தூர்பேட்டை பேரூராட்சி மன்றத்தலைவரும், சங்கரலிங்க சுவாமிகள் ஆசிரமத் தலைவருமான வெ.இராதாகிருஷ்ணன் விழாவுக்கு வந்த அனைத்து மக்களையும் வரவேற்று, அவர்களை உபசரித்து, விழாவுக்கான ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.