செஞ்சி, ஜூலை 14: கடந்த 10 நாட்களாக செஞ்சி சிறுகடம்பூர் பகுதியில் உள்ள சங்கரன் தெரு, பூக்கார தெரு, முனுசாமி தெரு, பட்டி தெரு, சாவடித் தெரு, ராமசாமி தெரு உள்ளிட்ட சிறுகடம்பூர் பகுதியில் தெரு விளக்கு எரியாததால், இப் பகுதி முழுவதும் இருளில் மூழ்கி உள்ளது.
இதனால் இப் பகுதியில் உள்ள முதியோர்கள், குழந்தைகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
மேலும் இப் பகுதி இருண்டு கிடப்பதால் 6 மணிக்கு மேல் பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழ்நிலை உள்ளது.
இது குறித்து செஞ்சி பேரூராட்சிக்கு தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என இப் பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர்.