நடந்தே சென்று மக்கள் குறைகளை கேட்பேன்

மதுராந்தகம், ஜூலை 14: மாவட்டம் முழுவதும் நடந்தே சென்று பொதுமக்களின் குறைகளை கேட்பேன் என்று காஞ்சிபுரம் எம்.பி. பி.விஸ்வநாதன் தெரிவித்தார்.  மதுராந்தகம் (தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்
Published on
Updated on
1 min read

மதுராந்தகம், ஜூலை 14: மாவட்டம் முழுவதும் நடந்தே சென்று பொதுமக்களின் குறைகளை கேட்பேன் என்று காஞ்சிபுரம் எம்.பி. பி.விஸ்வநாதன் தெரிவித்தார்.

 மதுராந்தகம் (தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தினை திறந்து வைக்க வியாழக்கிழமை வந்த காஞ்சிபுரம் எம்.பி. பி.விஸ்வநாதன், நகரில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார். அதனைத்தொடர்ந்து, ஜி.எஸ்.டி.சாலையில் மதுராந்தகம் சட்டப் பேரவைத் தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்து பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகளை மனுக்களாகப் பெற்றுக் கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

 காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டப் பேரவைத் தொகுதியில் 7-வது அலுவலகமாக மதுராந்தகத்தில் திறந்து உள்ளேன். சட்டப் பேரவைத் தொகுதிக்கு வரும் போது மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிகிறேன். மேலும், பொதுமக்களுக்கு தெரியும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகங்களுக்கு பொதுமக்களை சந்திக்கும் நாள் அட்டவணை தயார் செய்து வெகு விரைவில் வெளியிடுவேன்.

 நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இருக்கும் பிரதிநிதியிடம் கொடுக்கும் மனுவினை என்னுடைய நேரடி கண்காணிப்பின் மூலம் அதிகபட்சமாக ஒரு வாரத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்.

 பொறுப்பேற்றுள்ள புதிய அரசு பொதுமக்களின் பல்வேறு பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும். மக்களுக்கான பிரச்னைகளைத் தீர்க்கும் என்று நம்புகிறோம்.

 வரும் 2012-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ராகுல் காந்தி வழியில் மாவட்டம் முழுவதிலும்  மூலை, முடுக்கெல்லாம் நடந்து சென்று மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளேன் என்றார்.

 விழாவில் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வன், மாவட்ட துணைத் தலைவர் கிறிஸ்டோபர் ஜெயபால், மாவட்ட மகளிர் அணி தலைவி கன்னிகா உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.