காஞ்சிபுரம், ஜூலை 14: பெரியபாளையம் அருள்மிரு பவானி அம்மன் திருக்கோயில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு ஜூலை 17-ம் தேதி முதல் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
இது குறித்து இப் போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குநர் வெ.பால்ராஜ் வெளியிட்ட அறிக்கை: பெரியபாளையம் அருள்மிகு பவானி அம்மன் திருக்கோயிலில் ஆடித் திருவிழா நடைபெற உள்ளது. இத் திருவிழாவையொட்டி ஜூலை 17-ம் தேதி முதல் அக்டோபர் 18-ம் தேதிவரை ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிறு, மற்றும் திங்கள் ஆகிய நாள்களில் விழுப்புரம் கோட்டம், காஞ்சிபுரம் மண்டலம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இந்த பஸ்கள் காஞ்சிபுரம், பூந்தமல்லி, ஆவடி, திருவள்ளூர், சென்னை (கோயம்பேடு), ஊத்துக்கோட்டை, செங்குன்றம் மற்றும் பொன்னேரி ஆகிய இடங்களில் இருந்து பெரியபாளையத்துக்கு இரவு, பகல் முழுவதும் இயக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.