திருக்கோவிலூர், ஜூலை 14: திருக்கோவிலூர் அருகே அரிமா சங்கம் சார்பில் உலக மக்கள்தொகை தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருக்கோவிலூரை அடுத்த மணலூர்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் இவ்விழா நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியர் நடராஜன் தலைமை தாங்கினார். அரிமா சங்கத் தலைவர் சையத் அலி முன்னிலை வகித்தார்.
அப்போது மக்கள்தொகை பெருக்கமும் மனித வளமும், மக்கள்தொகை பெருக்கமும் விழிப்புணர்வும், மக்கள்தொகை பெருக்கத்தால் ஏற்படும் விளைவுகள் பற்றி மாணவர்களிடையே பேச்சுப்போட்டி நடத்தப்பட்டு, வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மேலும் மக்கள்தொகை பெருக்கத்தால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி அரிமா சங்க உதவித் தலைவர் குழந்தைவேலு சிறப்புரை ஆற்றினார்.
விழாவில், அரிமா சங்கச் செயலர் சிவக்குமார், பொருளர் திருவரங்கம் ரவிச்சந்திரன், மாவட்டத் தலைவர் அம்மு.ரவிச்சந்திரன், இப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கருப்பையன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆசிரியர் செந்தில்முருகன் நன்றி கூறினார்.