மினி டெம்போ கவிழ்ந்து 16 பேர் காயம்

கள்ளக்குறிச்சி, ஜூலை 14:  கள்ளக்குறிச்சி அருகே மினி டெம்போவில் துக்க நிகழ்ச்சிக்காக சென்றபோது மினி டெம்போ டயர் பஞ்சரானதால் நிலைத்தடுமாறி கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த 16 பேர் புதன்கிழமை காயமடைந்தனர்.
Published on
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி, ஜூலை 14:  கள்ளக்குறிச்சி அருகே மினி டெம்போவில் துக்க நிகழ்ச்சிக்காக சென்றபோது மினி டெம்போ டயர் பஞ்சரானதால் நிலைத்தடுமாறி கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த 16 பேர் புதன்கிழமை காயமடைந்தனர்.

÷ராயர்பாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் ஆதியின் மனைவி செல்லப்பாஞ்சி. இவரது தாயார் ராயப்பனூரில் உயிரிழந்து விட்டார்.

÷அந்த துக்கநிகழ்ச்சிக்கு செல்வதற்காக அவ்வூர் மக்கள் நைனார்பாளையத்துக்கு இரண்டு மினி டெம்போவில் பயணம் செய்தனர்.

÷மினி டெம்போவை அதே ஊரைச் சேர்ந்த பெரியசாமி என்பவர் ஓட்டி வந்தார். மினி டெம்போவின் டயர் பஞ்சராகி நிலைத்தடுமாறி கவிழ்ந்து விட்டது. அதில் பயணம் செய்த 16 பேர் காயமடைந்தனர்.

÷உடனே கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அதில் சின்னப்பொண்ணு, கன்னியம்மாள், பெரியம்மாள், தமிழரசி, பச்சையம்மாள், மைதிலி உள்ளிட்ட 6 பேர் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.