லாரி மோதி விவசாயி சாவு

கும்மிடிப்பூண்டி, ஜூலை 14: கும்மிடிப்பூண்டியை அடுத்த சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை தச்சூர் பகுதியில் பைக்கில் சென்றுக் கொண்டிருந்த தயாளன் (49) என்பவர் மீது லாரி மோதியதில் அதே இட
Published on
Updated on
1 min read

கும்மிடிப்பூண்டி, ஜூலை 14: கும்மிடிப்பூண்டியை அடுத்த சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை தச்சூர் பகுதியில் பைக்கில் சென்றுக் கொண்டிருந்த தயாளன் (49) என்பவர் மீது லாரி மோதியதில் அதே இடத்திலேயே பலியானார்.

÷கும்மிடிப்பூண்டியை அடுத்த முல்லைவாயல் மேடு பகுதியைச் சேர்ந்த துரைகண்ணுவின் மகன் தயாளன். இவர் கும்மிடிப்பூண்டி வழியாக தச்சூர் பகுதிக்கு தனது பைக்கில் சென்றுக் கொண்டிருந்தார்.

÷அப்போது ஆந்திரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த லாரி முன்னால் சென்றுக் கொண்டிருந்த தயாளனின் பைக் மீது மோதியது.

÷இந்த சம்பவத்தில் தயாளன் அதே இடத்திலேயே பலியானார். விபத்து நடந்ததும் லாரி ஓட்டுனர் ஓடிவிட்டார்.

÷சம்பவம் அறிந்து விரைந்த கவரப்பேட்டை போலீஸôர் விபத்தில் இறந்த தயாளனின் உடலை பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ÷சம்பவம் குறித்து கவரப்பேட்டை போலீஸôர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி  வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.