செஞ்சி, ஜூலை 14: வறட்சி நிவாரணத் திட்டம் மூலம் அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணற்று நீரை அருகில் உள்ள கட்டண கழிப்பறைக்கு பயன்படுத்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
செஞ்சி- விழுப்புரம் சாலையில் சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்தின் (2006-2007) கீழ் செஞ்சி பேரூராட்சி சார்பில் கட்டண கழிவறை கட்டடம் ரூ.4. லட்சம் செலவில் கட்டப்பட்டு சில தினங்களில் திறக்கப்பட
உள்ளது.
கழிவறைக்கென்று தனியாக ஆழ்துளைக் கிணறு இல்லை. இந்நிலையில் கழிவறைக்கு தேவையான தண்ணீரை கழிவறைக் கட்டடம் அருகே உள்ள செஞ்சி பேரூராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ள விழுப்புரம் மாவட்ட வறட்சி நிவாரணத் திட்டத்தின் கீழ் 2010-2011 ஆழ்துளை குழாய் கிணறு அமைக்கப்பட்டு, மினி பவர் பம்பு பொருத்தப்பட்டு குடிநீர் தொட்டி அமைத்துள்ளனர்.
இது தற்போது செயல்பட்டு வருகிறது. இந்த ஆழ்துளைக் கிணறு மூலம் நீரை கழிவறை கட்டடத்துக்கு மேல் உள்ள தொட்டியில் நிரப்பி கழிவறைக்கு பயன்படுத்த உள்ளனர். ÷
கட்டண கழிவறைக்கு தனியாக ஆழ்துளைக் கிணறு அமைக்கப்படாதது ஏன்? என்று பொதுமக்கள் வினவுகின்றனர்.