வெவ்வேறு இடங்களில் சாவு : 3 பேர் சாவு

காஞ்சிபுரம், ஜூலை 14: காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் வியாழக்கிழமை உயிரிழந்தனர். திருவண்ணாமலை மாவட்டம், களம்பூரைச் சேர்ந்தவர் சந்ரு(60). இவர் மற்றும் இவரது நண்பர்க
Published on
Updated on
1 min read

காஞ்சிபுரம், ஜூலை 14: காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் வியாழக்கிழமை உயிரிழந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், களம்பூரைச் சேர்ந்தவர் சந்ரு(60). இவர் மற்றும் இவரது நண்பர்கள் ஆம்னி வேனில் சென்னையில் இருந்து களம்பூர் நோக்கிச் சென்றனர். அப்போது முன்னால் சென்ற ஈச்சர் வேன் மீது இந்த ஆம்னி வேன் மோதியது. இதில் பலத்த காயமடைந்த சந்ரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இது குறித்து பாலுசெட்டி சத்திரம் போலீஸôர் விசாரிக்கின்றனர்.

 விழுப்புரம் மாவட்டம், பெருவனூரைச் சேர்ந்தவர் சின்னசாமி (70). இவர் மணிமங்கலம் அருகே வஞ்சுவாஞ்சேரி பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது படப்பையில் இருந்து ஒரகடம் நோக்கிச் சென்ற காரின் டிரைவர் இவர் மீது மோதாமல் இருக்க பிரேக் போட்டார்.

அப்போது பின்னால் வந்த மற்றொரு கார் பிரேக் போட்ட கார் மீது மோதியது. இதில் பிரேக் போட்ட கார் நிலை தடுமாறி சின்னசாமி மீது மோதியது. இதில் சின்னசாமி சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து மணிமங்கலம் போலீஸôர் விசாரிக்கின்றனர்.

மதுராந்தகம், மோச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பரசு(30). இவர் மோட்டார் சைக்கிளில் தனது வீட்டில் இருந்து மதுராந்தகம் நோக்கிச் சென்றார். அப்போது மதுராந்தகத்தில் அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று இவர் மீது மோதிவிட்டு சென்றது. இதில் காயமடைந்த அன்பரசு மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். இது குறித்து மதுராந்தகம் போலீஸôர் விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.