காஞ்சிபுரம், ஜூலை 23: டாடா மேஜிக் வாகனங்களை முறைப்படுத்தக்கோரி சிஐடியூ அமைப்பினர் சனிக்கிழமை தர்னா போராட்டத்தில் (படம்) ஈடுபட்டனர்.
ஷேர் ஆட்டோ சங்கத் தலைவர் எஸ்.இளங்கோவன் தலைமை தாங்கினார். இந்த தர்னா போராட்டத்தில் ஆட்டோ, அபே ஆட்டோ, ஷேர் ஆட்டோக்கள் மீது வழக்குப் போடக்கூடாது, தொழிலாளர்களை மிரட்டும் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். போராட்டத்தின் போது ஆட்டோ தொழில்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இந்தப் போராட்டத்தில் சிஐடியூ மாவட்டச் செயலர் இ.முத்துகுமார், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் கே.நேரு, கைத்தறி சங்க தலைவர் கே.ஜீவா, ஆட்டோ சங்கச் செயலர் டி.ஜெய்சங்கர், பொருளர் டி.ஹரிதாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.