கள்ளக்குறிச்சி, ஜூலை 23: புதுச்சேரி களவிளம்பர அலுவலகம், தமிழ்நாடு பாரம்பரிய சித்த வைத்திய மகா சங்கம் இணைந்து நடத்தும் மருத்துவ மூலிகைகள் கண்காட்சி மற்றும் இலவச சித்த மருத்துவ முகாம் அக்கராபாளையம் சமுதாய நலக் கூடத்தில் வியாழக்கிழமை நடந்தது.
முகாமில் தமிழ்நாடு பாரம்பரிய சித்த வைத்திய மகா சங்கத் தலைவர் கே.பி.அர்ச்சுனன், சென்னை அருகம்பாக்கம் அரசு சித்த மருத்துவக் கல்லூரி பட்டமமளிப்பு மாணவர்கள் 20 பேர், பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் 4 பேர், தேசிய சித்த மருத்துவ நிறுவன பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் 2 பேர் உள்ளிட்ட 26 பேர்கள் கொண்ட குழுவினர் நாடி பரிசோதனை செய்து சிகிச்சை மேற்கொண்டனர்.
முகாமில் சுமார் 500க்கும் மேற்பட்டோர்கள் பங்கேற்று சிகிச்சை பெற்றனர். இம் முகாமில் மூட்டு வாதம், சிக்குன் குனியா, புற்றுநோய் உள்ளிட்ட அனைத்து வகையான நோய்களுக்கும் சிகிச்சை மேற்கொண்டனர்.