கும்மிடிப்பூண்டி, ஜூலை 23: பள்ளிகளில் மாணவர்களுக்கு சமச்சீர் கல்வி புத்தகங்களை விரைந்து வழங்க வலியுறுத்தி கவரப்பேட்டையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் (படம்) நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்துக்குப் பகுதித் தலைவர் பி.வெங்கடேசன் தலைமை தாங்கினார். இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ராபர்ட் எபினேசர், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் லோகு, பகுதி நிர்வாகிகள் நாகராஜ், டில்லி துரை, விவசாயிகள் சங்கத் தலைவர் சீனு ஆகியோர் கலந்துக் கொண்டு பேசினார்கள்.
சமச்சீர் கல்வியை உடனடியாக அமல்படுத்துதல், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுத்தல், தரமான கல்விக் கொள்கையை வகுத்தல், கல்வி வியாபாரமாவதைத் தடுத்தல் போன்றவைகளை வலியுறுத்தி ஜனநாயக வாலிப சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.