செங்குன்றம், ஜூலை 23: செங்குன்றம் ஹோலி சைல்டு மெட்ரிக் பள்ளியில் வாரந்தோறும் சிலம்ப பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் நூற்றுகணக்கான மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர்.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் ஒரு தற்காப்பு கலை. சிலம்பம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எளிதில் பயிலக்கூடிய கலை. குறிப்பாக பெண்கள் தங்களை எதிரிகளிடம் இருந்து தங்களை தற்காத்து கொள்ளவும்,ஆரோகியத்திற்கும், தன்னம்பிக்கைக்கும் பெரிதும் உதவியாக அமையும் இந்த சிலம்பக் கலை. இத்தகைய சிறப்புமிக்க தமிழ் கலைக்கு முறையான அங்கிகாரம் அளித்த தமிழக அரசு, சிலம்பாட்டத்தை பள்ளி விளையாட்டாக அறிவித்ததன் பயனாக தமிழகம் முழுவதும் பள்ளி மாணவ, மாணவிகள் சிலம்பப் பயிற்சியில் ஈடுபட்டு ஆர்வத்துடன் கற்று வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் செங்குன்றம், பழவேற்காடு, ஆரம்பாக்கம், ஆவடி, பொன்னேரி, திருவள்ளூர், கும்முடிபூண்டி, வில்லிவாக்கம் என பல பகுதிகளில் ஆயிரகணக்கான மாணவர்களுக்கு திருவள்ளூர் மாவட்ட சிலம்பாட்ட கழக கிளைகள் சார்பில் மாவட்ட தலைவர் லயன் பி. ஜெயராமன், துணை தலைவர்கள் எம்.எஸ். ராஜா, துரை, ஹரிதாஸ், செயலாளர் வி. ரோசிபாபு, ஆகியோர் அனுமதியுடன் பயிற்சிகள் நடத்தப்படுகிறது.
செங்குன்றம் ஹோலி சைல்டு மெட்ரிக் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியை ஜெனீபர் பள்ளியில் 6, 7, 8, 9, மற்றும் 11-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் அனைவரும் சிலம்பாட்ட பயிற்சி பெற வாய்ப்பளித்துளார். அதன்படி வாரந்தோறும் நூற்றுகணக்கான மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் சிலம்பம் பயிற்சி பெறுகின்றனர். தலைமை பயிற்சியாளர் ஆர். முருககனி, உதவி பயிற்சியாளர்கள் எஸ். ரிஸ்வான் பாஷா, கே. பார்த்திபன் ஆகியோர் பயிற்சி அளித்து வருகின்றனர்.