கடலூர், ஜூலை 23: திராவிடர் கழகம் சார்பில் கடலூரில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடந்தது.
பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் சுவாமி நித்தியானந்தாவுக்கு நீதிமன்றம் வழங்கிய பிணையை (ஜாமீனை) ரத்து செய்ய வேண்டும். வழக்கை விரைந்து நடத்தி, அவருக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு திராவிடர் கழக மாநில மகளிர் பாசறை செயலாளர் ரமாபிரபா தலைமை வகித்தார். மாவட்ட தி.க. தலைவர் தண்டபாணி வரவேற்றார்.
÷ஆர்ப்பாட்டத்தை மாநில துணைப் பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் தொடங்கி வைத்துப் பேசினார். மாவட்டத் தலைவர் இளங்கோவன், செயலாளர்கள் அருள்ராஜ், புத்தன், மண்டலச் செயலாளர் அரங்க. பன்னீர்செல்வம், மாவட்ட அமைப்பாளர் தாமோதரன், மாவட்ட மகளிரணி செயலாளர் ரா.அமுதவல்லி, மண்டல இளைஞரணி செயலாளர்கள் இசக்கிமுத்து, உதயசங்கர், இளைஞரணி அமைப்பாளர் பஞ்சமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.