திருவள்ளூர், ஜூலை 23: மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதியை நியமிக்க வேண்டும் என்உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி வழக்கறிஞர்கள் வெள்ளிக்கிழமை நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி பதவி கடந்த சில மாதங்களாக காலியாக உள்ளது. மேலும் திருவள்ளூர் நீதிமன்றங்களில் அலுவலர்கள் பற்றாக்குறையும், பணியிடங்கள் நிரப்பப்படாமலும் உள்ளது. இதையொட்டி திருவள்ளூர் சார்பு நீதிமன்றம், விரைவு நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் மாவட்ட பார் அசோஷியேசன் தலைவர் லோகராஜ் தலைமையில் வெள்ளிக்கிழமை ஒருநாள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதில் செயலாளர் ஹரிபாபு, துணைத் தலைவர் சீனீவாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.