கடலூர், ஜூலை 23: கடலூர் வாசிப்போர் இயக்கக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடந்தது.
கூட்டத்துக்கு இயக்க ஒருங்கிணைப்பாளர் கவிஞர் பால்கி தலைமை வகித்தார். விக்கி லீக்ஸ்- வெளிவராத உண்மைகள் என்ற தலைப்பில் எல்.ஐ.சி. ஊழியர்கள் தொழிற்சங்கத் தலைவர் சுகுமாறன், மக்கள் மனதும் ஓவியங்களும் என்ற தலைப்பில் ஓவியர் ரமேஷ், பிரபல ஓவியங்களின் ஆளுமைகள் என்ற தலைப்பில் வாசிப்போர் இயக்கத் தலைவரும் கிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வருமான ஆர்.நடராஜன் ஆகியோர் பேசினர். மறைந்த மேற்கு வங்க வீதி நாடகக் கலைஞர் பாதல் சர்க்கார், மற்றும் ஓவியர் எம்.எஃப். ஹுசைன் ஆகியோர் பற்றி கூட்டத்தில் தகவல்கள் தெரிவிக்கப் பட்டன.