விருத்தாசலம், ஜூலை 23: விருத்தாசலம் டேனிஷ்மிஷன் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
÷இந் நிகழ்ச்சியை விருத்தாசலம் கல்வி மாவட்ட அலுவலர் பத்ரூ தலைமையேற்று தொடங்கி வைத்தார். இதில், இயற்பியல், வேதியியல், உயிரியியல், தாவரவியல், விலங்கியல் உள்ளிட்ட பாடங்களுக்கான செய்முறை குறித்த படைப்புகளை மாணவர்கள் உருவாக்கியிருந்தனர். நிகழ்ச்சியில் உதவித் தலைமை ஆசிரியர் பால்அருள்குமார் வரவேற்றார். தலைமை ஆசிரியர் அதிசயராஜன் முன்னிலை வகித்தார். ஆசிரியர்கள் ராபர்ட், மணிமொழி, அருணாதேவி, கொளஞ்சிநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.