விழுப்புரம் அரசு கலைக் கல்லூரியில் 28-ல் மூன்றாம் கட்ட கலந்தாய்வு

விழுப்புரம், ஜூலை 23:  விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு 28-ம் தேதி தொடங்குகிறது என்று கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார். ÷இது குறித்து அவர்
Published on
Updated on
1 min read

விழுப்புரம், ஜூலை 23:  விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு 28-ம் தேதி தொடங்குகிறது என்று கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

÷இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இக்கல்லூரியில் 28-ம் தேதி முதல் மூன்றாம் கட்ட கலந்தாய்வு தினசரி காலை 9 மணிக்கு தொடங்குகிறது.

÷இதில் பி.எஸ்சி. தாவரவியல் (உயிரியல் அல்லது தாவரவியல் பயின்ற மாணவர்கள் மட்டும்), அனைத்து இனத்தவரும், தரவரிசை 946 முதல் 1500 வரை உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.

÷தொடர்ந்து 29-ம் தேதி பி.எஸ்சி. அனைத்து பாடப்பிரிவுகளும், பிற்படுத்தப்பட்டோர் மட்டும், தரவரிசை 1501 முதல் 3677 வரை, பி.ஏ, பி.காம், பிற்படுத்தப்பட்டோர் மட்டும், தரவரிசை 1001 முதல் 1076 வரை, பி.காம். வொகேஷனல், பிற்படுத்தப்பட்டோர் மட்டும், தரவரிசை 79 முதல் 200 வரை உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.

÷ஆகஸ்ட் 4-ம் தேதி பி.எஸ்சி. அனைத்து பாடப்பிரிவுகளும், அனைத்து இனத்தவர்களும், தரவரிசை 1301 முதல் 1600 வரை, 5-ம் தேதி பி.ஏ. அனைத்து பாடப்பிரிவுகளும், அனைத்து இனத்தவரும், தரவரிசை 1001 முதல் 1076 வரை கலந்து கொள்ளலாம்.

÷இத்தேதிகளில் கலந்து கொள்ளும் மாணவர்கள், அனைத்து மூலச்சான்றுகள், மாற்றுச் சான்று, ஜாதிச்சான்று மற்றும் இவற்றின் இரண்டு ஜெராக்ஸ் நகல்கள், மூன்று புகைப்படங்கள் கொண்டு வரவேண்டும்.

÷சேர்க்கைக் கட்டணம் ரூ.2,677 உடன் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.