விழுப்புரம்- திருச்சி சாலையில் ஆக்கிரமிப்புகள் இடிப்பு

விழுப்புரம், ஜூலை 23:  விழுப்புரம்- திருச்சி சாலை அகலப்படுத்தவுள்ளதையொட்டி ஆக்கிரமிப்புகள் சனிக்கிழமை இடித்து அகற்றப்பட்டன. ÷இந்த சாலை மிக விசாலமான இடத்தைக் கொண்டிருந்தாலும், இரண்டு பக்கமும் கடை உரிமை
Published on
Updated on
1 min read

விழுப்புரம், ஜூலை 23:  விழுப்புரம்- திருச்சி சாலை அகலப்படுத்தவுள்ளதையொட்டி ஆக்கிரமிப்புகள் சனிக்கிழமை இடித்து அகற்றப்பட்டன.

÷இந்த சாலை மிக விசாலமான இடத்தைக் கொண்டிருந்தாலும், இரண்டு பக்கமும் கடை உரிமையாளர்கள் அதிகளவில் ஆக்கிரமித்து பந்தல் போட்டுள்ளனர்.

÷இந்த சாலையை அகலப்படுத்தி சாலையின் நடுவில் தடுப்பு ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

÷எனவே கடை உரிமையாளர்களுக்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற ஏற்கெனவே நோட்டீஸ் அளிக்கப்பட்டது.

÷இதையொட்டி பெரும்பாலான கடை உரிமையாளர்கள் தாங்களாகவே தங்கள் கடைகளின் முன்பு இருந்த பந்தல்களை சனிக்கிழமை காலையிலேயே அகற்றினர்.

÷நெடுஞ்சாலைத் துறை மற்றும் நகராட்சி ஊழியர்கள் ஜே.சி.பி. எந்திரத்துடன் வந்து சிமென்ட் தரைதளங்கள் அமைக்கப்பட்ட இடங்களை இடித்து அகற்றினர்.

÷என்னதான் ஆக்கிரமிப்புகளை எடுத்தாலும், இன்னும் சிலநாள்களில் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யப்படும்.

÷எனவே சாலையின் இருபுறமும் நடைமேடை அமைத்தால் பாதசாரிகள் நடந்து செல்லவும் வசதியாக இருக்கும், மீண்டும் ஆக்கிரமிப்பு நடக்காமலும் இருக்கும் என்று பொதுமக்கள் கருதுகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.