திருத்தணி, ஜூலை 30: ஆடி அமாவாசையை முன்னிட்டு, அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு திருக்கல்யாணம் சனிக்கிழமை நடைபெற்றது.
÷இதில் பக்தர்கள் பெருமளவில் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.÷பழைய பஜார் தெருவில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசையில் அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கம்.
÷அதேபோல் இந்த ஆண்டும் வெள்ளிக்கிழமை கோயில் வளாகத்தில் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.
÷அதைத் தொடர்ந்து சனிக்கிழமை காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு சீர்வரிசை எடுத்து வரப்பட்டு சிறப்பு அலங்காரமும், சிறப்பு ஹோமமும் நடைபெற்றது.
÷பின்னர் அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்று தீபாராதனை நடைபெற்றது. இதில் பழைய பஜார் தெரு, பாரதியார் தெரு, சந்து தெரு, மேட்டுத் தெரு, எம்.கே.எஸ். சுப்பிரமணியம் தெரு ஆகிய வீதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பெண் பக்தர்கள் திருக்கல்யாணத்தில் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.
÷பிற்பகல் 1 மணிக்கு திருக்கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 7 மணிக்கு அங்காள பரமேஸ்வரி அம்மன் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
÷நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் மற்றும் பர்வதராஜகுல மரபினர் ஆகியோர் செய்திருந்தனர்.