சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் மின்நிறுத்த நேரம் மாற்றம்

சிதம்பரம், ஜூலை 30: சிதம்பரம் கோட்டத்துக்கு உட்பட்ட கீழ்கண்ட பகுதிகளில் 2 மணி நேரம் மின்நிறுத்தம் செய்யப்படும் நேரம் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் கீழ்கண்டவாறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என செயற்பொறியாளர் இரா
Published on
Updated on
1 min read

சிதம்பரம், ஜூலை 30: சிதம்பரம் கோட்டத்துக்கு உட்பட்ட கீழ்கண்ட பகுதிகளில் 2 மணி நேரம் மின்நிறுத்தம் செய்யப்படும் நேரம் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் கீழ்கண்டவாறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என செயற்பொறியாளர் இரா.செல்வசேகர் தெரிவித்துள்ளார்.

÷சிதம்பரம் நகரம் நடராஜா மின்னூட்டி மூலம் மின்சாரம் பெறும் பகுதிகள்- காலை 8 மணி முதல் 10 மணி வரை, டூரிஸம் மின்னூட்டி மூலம் மின்சாரம் பெறும் பகுதிகள்- மதியம் 12 மணி முதல் 2 மணி வரை, அண்ணாமலைநகர், மாரியப்பாநகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்- மதியம் 4 மணி முதல் 6 மணி வரை, அம்மாபேட்டை, மணலூர், வண்டிகேட் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்- காலை 10 மணி முதல் 12 மணி வரை,   காட்டுமன்னார்கோவில் நகரம், லால்பேட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்- காலை 8 மணி முதல் 10 மணி வரை, புவனகிரி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை, பு.முட்லூர், ஸ்ரீமுஷ்ணம், சேத்தியாத்தோப்பு நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்- மதியம் 2 மணி முதல் 4 மணி வரை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.