விழுப்புரம், ஜூலை 30: மாணவர்கள் மற்றும் பெற்றோரின் கோரிக்கையை ஏற்று விழுப்புரம் ஏழுமலை பாலிடெக்னிக் கல்லூரி 3-ம் தேதி திறக்கப்படும் என்று கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.
கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் மற்றும் மாணவர்கள் தொடர்பு கொண்டு கல்லூரியை உடனடியாக திறக்கக் கோரினர். கல்லூரி மூடப்பட்டிருப்பதால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுவதை சுட்டிக்காட்டி கல்லூரியை உடனடியாக திறக்கக் கோரியதால் வரும் 3-ம் தேதி கல்லூரியை திறக்க நிர்வாகம் முடிவெடுத்துள்ளது என்று அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.