பெரியபாளையத்தில் திமுகவினர் சாலை மறியல்

கும்மிடிப்பூண்டி, ஜூலை 30:  முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் போலீஸôரால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, கும்மிடிப்பூண்டியை அடுத்த பெரியபாளையத்தில் சனிக்கிழமை தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் மற்றும் சால
Published on
Updated on
1 min read

கும்மிடிப்பூண்டி, ஜூலை 30:  முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் போலீஸôரால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, கும்மிடிப்பூண்டியை அடுத்த பெரியபாளையத்தில் சனிக்கிழமை தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியிலில் ஈடுபட்டனர்.

÷திருவாரூர் பகுதியில் முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, எல்லாபுரம் ஒன்றிய தி.மு.க. சார்பில் பெரியபாளையத்தில் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் நடத்தினர்.÷எல்லாபுரம் ஒன்றிய தி.மு.க. செயலர் ஜே.மூர்த்தி, ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் கன்னிகை ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

÷இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. பொதுக் குழு உறுப்பினர் தண்டலம் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய தி.மு.க. துணைச் செயலர் டி.கே.முனிவேல், ஒன்றிய கவுன்சிலர்கள் குமார், அண்ணாமலை, ரவி, பெரியபாளையம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கேசவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

÷பெரியபாளையம் பஜாரில் ஊர்வலமாக சென்ற தி.மு.க.வினர் பின்னர் பெரியபாளையம் பஸ் நிலையம் எதிரில் சென்னை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

÷இதைத் தொடர்ந்து சம்பவ இடம் விரைந்த பெரியபாளையம் போலீஸôர் சாலை மறியலில் ஈடுபட்ட 50 தி.மு.க.வினரை கைது செய்து பின்னர் விடுதலை செய்தனர்.

÷இந்த திடீர் சாலை மறியலால் சென்னை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து தடைபட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.