பெருமாள்பட்டு கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்

திருவள்ளூர், ஜூலை 30: திருவள்ளூரை அடுத்த பெருமாள்பட்டு கிராமத்தில் வரும் 17.8.11 அன்று மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெறவுள்ளது. ÷திருவள்ளூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெருமாள்பட்டு கிராமத்தில் மக்கள் த
Published on

திருவள்ளூர், ஜூலை 30: திருவள்ளூரை அடுத்த பெருமாள்பட்டு கிராமத்தில் வரும் 17.8.11 அன்று மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெறவுள்ளது.

÷திருவள்ளூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெருமாள்பட்டு கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம், மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் சாட்டர்ஜி தலைமையில் வரும் 17.8.11 அன்று நடைபெறவுள்ளது.

÷இதையொட்டி சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் முன்னதாக 2.8.11 அன்று கிராமத்துக்கு வந்து புகார்கள் தொடர்பான மனுக்களை பெறவுள்ளார்.

÷இதையொட்டி பெருமாள்பட்டு மற்றும சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்களது குறைகள் தொடர்பான மனுக்களை தனித்துணை ஆட்சியரிடம் கொடுத்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் சாட்டர்ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்