வடலூர் வள்ளலார் குருகுலப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

நெய்வேலி, ஜூலை 30: வடலூரில் உள்ள வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது. ÷இக்கண்காட்சியை மாவட்டக் கல்வி அலுவலர் பாரதமணி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார். பள்
Published on
Updated on
1 min read

நெய்வேலி, ஜூலை 30: வடலூரில் உள்ள வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.

÷இக்கண்காட்சியை மாவட்டக் கல்வி அலுவலர் பாரதமணி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார். பள்ளியின் தாளாளர் ஆர்.செல்வராஜ் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார். ÷இப்பள்ளியைச் சேர்ந்த 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கண்காட்சியில் பங்கேற்று, கடல் நீரை குடிநீராக்குதல், கற்றாலை மூலம் மின்சாரம் தயாரித்தல், சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுத்தல், தாவரங்களிலிருந்து மின்சாரம் தயாரித்தல் உள்ளிட்டவைகளை முன்மாதிரியாகக் கொண்டு தங்களது படைப்புகளை பார்வைக்கு வைத்திருந்தனர்.

÷கண்காட்சிக்கான ஏற்பாடுகளை உதவித் தலைமையாசிரியர் சந்திரமோகன், அறிவியல் ஆசிரியர்கள் பி.வேலவன், எஸ்.ராமமூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.