கடலூர், ஜூலை 30: தி.மு.க.வினர் மீது போடப்பட்டு வரும் வழக்குகளைச் சந்திக்க, நீதிமன்றங்கள்தோறும் வழக்கறிஞர்கள் குழுக்களை அமைப்பது என்று, தி.மு.க. வழக்கறிஞர் அணி தீர்மானித்து உள்ளது.
÷சனிக்கிழமை கடலூரில் நடந்த மாவட்ட தி.மு.க. வழக்கறிஞரணி ஆலோசனைக் கூட்டத்தில் மேற்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
÷ஆகஸ்ட் 1-ம் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கும் தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க. வழக்கறிஞர்கள் திரளாகப் பங்கேற்பது, அ.தி.மு.க. அரசு தி.மு.க.வினர் மீது போட்டு வரும் வழக்குகளை சட்டரீதியாகச் சந்திப்பது என்றும் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
÷கூட்டத்துக்கு, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். கடலூர் வழக்கறிஞரணி அமைப்பாளர் சிவராஜ் முன்னிலை வகித்தார்.
÷நகராட்சித் தலைவர் து.தங்கராசு, முன்னாள் நகராட்சித் தலைவர் ஏ.ஜி.ராஜேந்திரன், வழக்கறிஞரணி துணை அமைப்பாளர் கோ.வனராசு, ஏ.ஜி.ஆர்.சுந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
÷மனோகரன் நன்றி கூறினார்.