விவசாயிகளுக்கு ரூ.1 கோடி வங்கி கடனுதவி

பொன்னேரி, ஜூலை 30:  பொன்னேரியில் அமைந்துள்ள பாங்க் ஆப் இந்தியா வங்கி சார்பில் அப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு ரூ.1 கோடிக்கு விவசாயக் கடன் வழங்கப்பட்டன. ÷பொன்னேரியில் அமைந்துள்ள பாங்க் ஆப் இந்தியா வங்
Published on
Updated on
1 min read

பொன்னேரி, ஜூலை 30:  பொன்னேரியில் அமைந்துள்ள பாங்க் ஆப் இந்தியா வங்கி சார்பில் அப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு ரூ.1 கோடிக்கு விவசாயக் கடன் வழங்கப்பட்டன. ÷பொன்னேரியில் அமைந்துள்ள பாங்க் ஆப் இந்தியா வங்கியின் கிளை சார்பில் விவசாயிகள் தினவிழா வங்கி வளாகத்தில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

÷விழாவுக்கு, சென்னை மண்டல மேலாளர் ஆர்.கோபாலாகிருஷ்ணன் தலைமை வகித்தார். சென்னை மண்டல துணை மேலாளர் இராஜீவ்குமார் குப்தா, பொன்னேரி பாங்க் ஆப் இந்தியா வங்கியின் கிளை மேலாளர் பி.எஸ். திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்

÷ வங்கியன் மார்க்கெட்டிங் துறை சிதம்பரகுமார் வரவேற்றார். விவசாயிகள் தினவிழாவில் ரூ.1 கோடிக்கு கல்வி, விவசாயம், பயிர், கறமை மாடு மற்றும் சுய உதவிக்குழு கடன் உள்ளிட்ட பல்வேறு கடன் தொகைக்கான காசோலையை பயனாளிகளிடம் வழங்கி சென்னை மண்டல மேலாளர் கோபாலகிருஷ்ணன் பேசியது:

÷ஜூலை மாதம் 1-ம் தேதி முதல் 31-ம் தேதி முடிய இம்மாதம் முழுவதும் பாங்க் ஆப் இந்தியா வங்கி சார்பில், விவசாயிகள் தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. ÷வாடிக்கையாளர்கள் வங்கியில் அதிக அளவில் கடன் பெற்று அதை சரியாக திருப்பி செலுத்த வேண்டும்.

÷திருவள்ளூர் மாவட்டத்தில் மற்ற வங்கிகள் வாடிக்கையாளர்களிமிருந்து ரூ.100 முதலீடு பெற்று ரூ.63 கடனாக வழங்குகிறது. ஆனால் பாங்க் ஆப் இந்தியா வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.100 ரூபாய் முதலீடு பெற்று ரூ.118 கடன் அளித்து வருகிறோம் என தெரிவித்தார்.

÷விவசாயிகள் தின விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பொன்னேரி கோட்டாட்சியர் கந்தசாமி விவசாயிகள் தங்கள் நிலத்துக்கு பட்டா மற்றும் பெயர் மாற்றம் தொடர்பான மனுக்களை இனிவரும் நாட்களில் வட்டாட்சியர் அலுவலகத்தில் வந்து அளிக்காமல் தங்கள் பகுதியிலேயே உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் அளித்து ஒரு மாதத்துக்குள் பட்டா மற்றும் பெயர் மாற்றம் ஆகியவற்றுக்கான சான்றிதழை பெற்று கொள்ளலாம் என தெரிவித்தார்.

÷தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பக்கலையை ஊக்குவிக்கும் வகையில் சுப்ரமணிய ஆசான் வெல்ஃபர் சிலம்பக்கலை அகாதெமிக்கு ரூ.1 லட்சம், பாங்க் ஆப் இந்தியா வங்கி சார்பில் நிதியுதவி ளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.