திருவள்ளூர், ஜூலை 30: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விவசாய அலுவலர்களுக்கு வேளாண் கழிவுகளைக் கொண்டு சில்பாலின் முறையில் மண் புழு உரம் தயாரிக்கும் பயிற்சி அண்மையில் நடைபெற்றது.
÷திரூர் வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண் உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப பேராசிரியர் முனைவர் குமரபெருமாள் தலைமையில் நடைபெற்ற இப்பயிற்சியை திட்ட ஒருங்கிணைப்பாளர் தேவநாதன் தொடங்கி வைத்தார்.
÷இதில் வேளாண் கழிவுகளான சாணம், வைக்கோல், களையெடுக்கும் புல் ஆகிய இயற்கை பொருள்களைக் கொண்டு எளிய முறையில் தரமான மண்புழு உரம் தயாரிக்கும் முறை குறித்து விளக்கி கூறினர்.
÷இதுபோல் இயற்கை உரங்களை பயன்படுத்தும்போது மண்ணின் தன்மையும் கெடாமல் அதிக சத்துடன் இருக்கும் என குமரபெருமாள் விளக்கினார்.
÷இப்பயிற்சியில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வேளாண்துறை அலுவலர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.