விழுப்புரம், ஜூலை 30: முன்னாள் துணை முதல்வரும் திமுக பொருளாளருமான மு.க. ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து சாலை மறியல் செய்த முன்னாள் அமைச்சர் க. பொன்முடி உள்பளிட்ட 121 திமுக-வினர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
திருவாரூர் சென்று கொண்டிருந்தபோது, அந்த மாவட்டச் செயலரை கைது செய்ய போலீஸôர் சென்றபோது, அவரை ஒப்படைக்க மறுத்து மறியல் செய்ததாக மு.க.ஸ்டாலின் உள்பட 300 திமுக-வினர் கைது செய்யப்பட்டனர்.
இதனைக் கண்டித்து விழுப்புரத்தில் பொன்முடி தலைமையில் அவரது வீட்டிலிருந்து திமுக-வினர் ஊர்வலமாக வந்து, புதுவை சாலையில் உள்ள காந்தி சிலை அருகில் மறியல் போராட்டம் நடத்தினர்.
இதனால் பொன்முடி மற்றும் நகர்மன்றத் தலைவர் இரா. ஜனகராஜ், மாவட்ட ஒழுங்குமுறை விற்பனைக் கூட முன்னாள் தலைவர் கு. ராதாமணி, மாவட்ட பொருளாளர் புகழேந்தி உள்ளிட்ட 121 பேர் கைது செய்யப்பட்டனர்.
செஞ்சியில்...
செஞ்சி, ஜூலை 30: செஞ்சியில் சாலை மறியலில் ஈடுப்ட்ட திமுக-வினரை போலீஸôர் கைது செய்தனர்.
செஞ்சி நகர திமுக. நகர செயலர் காஜா நஜீர் மற்றும் செஞ்சி ஒன்றிய செயலர் விஜயகுமார், இளைஞர் அணி சிங்கம் சேகர் உள்ளிட்டோர் செஞ்சி கூட்டுசாலையில் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனே அங்கிருந்த போலீஸôர் சாலை மறியலில் ஈடுப்பட்ட திமுக-னர் 12 பேரை கைது செய்து பின்னர் விடுவித்தனர்.