சுடச்சுட

  

  மதுராந்தகம்,ஜன.19: பிரபல எழுத்தாளர் முனைவர் தாமரைக்கண்ணன்(77), காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிறுப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் புதன்கிழமை (ஜனவரி 19) காலமானார்.

   தாமரைக்கண்ணனுக்கு பத்மாவதி என்ற மனைவியும், 4 மகன்களும்,ஒரு மகளும் உள்ளனர்.

   ÷அவரது இறுதிச் சடங்குகள் அச்சிறுப்பாக்கத்தில் வியாழக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது. தொடர்புக்கு: 94441-66189.

   ÷சிறுகதை, நாவல், நாடகம்,வரலாறு,குழந்தை இலக்கியம்

   உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் 52 நூல்கள் எழுதியுள்ளார் தாமரைக்கண்ணன்.

   ÷இதில் சங்கமித்தரை,வரலாற்றுக் கருவூலம்,நெஞ்சத்தில் நீ... ஆகிய படைப்புகள் தமிழக அரசின் விருது பெற்றவை.

   ÷சிறுகதைச் செம்மல்,பல்கலைச் செம்மல், நாடகமாமணி, திருக்குறள் நெறிதென்றல் உள்ளிட்ட விருதுகளையும் தமிழக அரசு இவருக்கு வழங்கியுள்ளது.÷மேலும் இவர், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், பட்டிமன்றப் பேச்சாளர், நல்லாசிரியர் விருது பெற்றவர், அகில இந்திய எழுத்தாளர் சங்கத்தில் துணைத் தலைவராக பதவி வகித்தவர். உலகப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai