பண்ருட்டி, பிப். 10: பண்ருட்டி, அண்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் செஞ்சுருள் சங்கம், இளையோர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் ரத்ததான முகாம் (படம்) வியாழக்கிழமை நடந்தது.
கல்லூரி புல முதல்வர் ஏ.செந்தில்குமார் தலைமை தாங்கினார். செஞ்சுருள் திட்ட அலுவலர் பி.தமிழழகன் வரவேற்றார். செஞ்சுருள் சங்க மாவட்ட மேலாளர் க.கதிரவன், மாவட்ட மேற்பார்வையாளர் ர.தங்கமணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
முகாமில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் 60 பேர் ரத்ததானம் செய்தனர். கடலூர் அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவர் சண்முககனி தலைமையிலான குழுவினர் ரத்தத்தை சேகரித்தனர். இதில் அனைத்து துறை தலைவர்களும், பேராசிரியர்களும் கலந்துகொண்டனர். இளையோர் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் ஜெ.பாலாஜி நன்றி கூறினார்.