திருவள்ளூர், பிப். 10: உள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (சி.பி.சி.எல்.), அகஸ்தியா ஃபவுண்டேஷன் ஆகியவை சார்பில் கிராமப்புற குழந்தைகளுக்கான அறிவியல் கண்காட்சி மணலி டாக்டர் அம்பேத்கர் மைதானத்தில் புதன்கிழமை தொடங்கியது.
சி.பி.சி.எல். இயக்குநர் எல். சபாரத்தினம் அறிவியல் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார்.
மேலாண்மை இயக்குநர் (பொறுப்பு) எஸ். வெங்கட்ரமணா, தொழில்நுட்ப இயக்குநர் டி.எஸ். ராமச்சந்திரன், சென்னை மாநகராட்சி உறுப்பினர் முல்லை ஞானசேகரன், அகஸ்தியா பவுண்டேஷன் நிர்வாகி தியாகராஜன் ஆகியோர் நிகழ்ச்சியில் பேசினர்.
இயற்பியல், வேதியியல், உயிரியல் தொடர்பாக போன்றவற்றில் 110 படைப்புகள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.
3 நாள்கள் நடைபெறும் இக்கண்காட்சியில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 15 பள்ளி மாணவ, மாணவியர்கள் கண்காட்சியை காண வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.