கள்ளக்குறிச்சி, பிப்.10: கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வானவரெட்டி கிராமத்தில் பயணியர் நிழற்குடை சலூன் கடையாக மாறியதால் பொதுமக்கள் சிரமம் அடைந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வானவரெட்டி கிராமத்தில் சுமார் 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இக்கிராமத்தில் மாவட்ட ஊராட்சி நிதி ஒதுக்கீட்டின் கீழ் கடந்த 1997-98-ல் பயணியர் நிழற்குடை கட்டப்பட்டது. அந்த பயணியர் நிழற்குடை தற்போது சலூன் கடையாக மாறிவிட்டது.
இதனால் மக்கள் பஸ்ஸிற்காகக் காத்திருக்க இடமின்றி சிரமம் அடைந்துள்ளனர்.
இது குறித்து கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ச.சேகரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, நான் இங்கு புதிதாக வந்துள்ளேன். உடனே அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.