கரும்பு டன்னுக்கு ரூ. 3 ஆயிரம் வழங்க விவசாய சங்கங்கள் கோரிக்கை

கடலூர், பிப். 10:    கரும்பு டன்னுக்கு ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.  கடலூர் மாவட்ட அனைத்து விவசாய சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் கடலூரில் புதன்கிழமை நடந்தது. ÷கூட்டத்
Published on

கடலூர், பிப். 10:    கரும்பு டன்னுக்கு ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

 கடலூர் மாவட்ட அனைத்து விவசாய சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் கடலூரில் புதன்கிழமை நடந்தது.

÷கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:  ÷2011- 2012 -ம் ஆண்டுக்கு மத்திய அரசு, கரும்புக்கான குறைந்தபட்ச விலையை கடந்த ஜூன் மாதம் அறிவித்தது. அதன்பிறகு ஜார்க்கண்ட மாநிலத்தில் டன்னுக்கு ரூ. 2,500 எனவும், உத்தரப் பிரதேசம், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் ரூ. 2,400 எனவும்  புதுவையில் ரூ. 2,200 எனவும், தமிழகத்தில் ரூ. 2,100 எனவும் விலை அறிவித்து உள்ளது. தமிழகத்தில்தான் குறைந்த விலை அறிவிக்கப்பட்டு உள்ளது.

 எனவே தமிழக அரசு வெட்டுக்கூலி, வாகன வாடகை இல்லாமல் வயல்வெளி விலையாக டன்னுக்கு ரூ. 3 ஆயிரம் வழங்க வேண்டும். வெட்டுக் கூலியை ஆலை நிர்வாகம் ஏற்க வேண்டும்.

 புயலில் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம், நாகை மாவட்டங்களில் பாதிக்கப்படட்ட கரும்பு விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். அனைத்து சர்க்கரை ஆலைகளிலும் கரும்பு, சர்க்கரை மூட்டைகளை எடைபோட, ஒரே மாதிரியான எடைமேடையை பயன்படுத்த அரசு உத்தரவிட வேண்டும் என்ற கோரிகைகள் அடங்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

 கோரிக்கைகளை வலியுறுத்திவரும் 14-ம் தேதி, கடலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் மறியல் போராட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

÷கூட்டத்துக்கு மாவட்ட உழவர் மன்றங்களின் கூட்டமைப்பின் தலைவர் பி.ரவீந்திரன் தலைமை வகித்தார். சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு விவசாயிகள் சங்கத் தலைவர் விஜயகுமார், கரும்பு விவசாயிகள் சங்க பெண்ணாடம் ஆலைப் பகுதி தலைவர் மாணிக்க வேல், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன், கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் காமராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X