திருக்கோவிலூர், பிப். 10: திருக்கோவிலூர் அருகே அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், கிராமக் கல்விக்குழு உறுப்பினர்களுக்கான முதல்கட்ட பயிற்சி முகாம் திங்கள், செவ்வாய், புதன் ஆகிய 3 நாள்கள் நடைபெற்றது.
திருக்கோவிலூரை அடுத்த அரியலூர் வட்டார வள மையத்தில் நடைபெற்ற இம்முகாமை, வட்டார வள மைய மேற்பார்வையாளர் க.அன்பரசு தொடங்கி வைத்தார். ஆசிரியர் பயிற்றுனர் கிருஷ்ணன் வரவேற்றார். உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் ரா.காளியாப்பிள்ளை, மா.தண்டபாணி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தைச் சேர்ந்த ஒய்வுபெற்ற தலைமை ஆசிரியர் சு.ராஜேந்திரன், ஆசிரியர் பயிற்றுனர்கள் தேன்மொழி, சிவக்குமார், கிருஷ்ணன் ஆகியோர் கருத்தாளர்களாக பங்கேற்று பயிற்றி அளித்தனர்.
இதில் கிராமக் கல்விக்குழு உறுப்பினர்கள் 90 பேருக்கு கிராமக் கல்விக் குழுவின் செயல்பாடுகள், பதிவேடுகள் பராமரிப்பு, பள்ளியின் முழு வளர்ச்சிக்கான திட்டமிடல், தரமான கல்வி, இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் ஆகிய தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட்டது. ஆசிரியர் பயிற்றுனர் சிவக்குமார் நன்றி கூறினார். இதேபோல் பெரியகொள்ளியூர், சீர்ப்பனந்தல், கடுவனூர், மங்கலம், சீர்ப்பாதநல்லூர் ஆகிய கருத்தாய்வு மையங்களிலும் இப்பயிற்சி முகாம் நடைபெற்றது.
இதில் அறிவியல் இயக்கத்தைச் சேர்ந்த ரா.முரளிகிருஷ்ணன், ஞான.சத்தியமூர்த்தி, ரம்போலா, ராமநாதன், வெங்கடேசன், ஆசிரியர் பயிற்றுனர்கள் ஷேக்முகமது, பிரான்ஸிஸ், பரந்தாமன் உள்ளிட்டோர் கருத்தாளர்களாக பங்கேற்று பயிற்சி அளித்தனர்.