திருக்கோவிலூர், பிப். 10: திருக்கோவிலூர் அருகே அய்யனார் மற்றும் துர்கையம்மன் கோயில் குடமுழுக்கு விழா நடைபெற்றது.
திருக்கோவிலூரை அடுத்த எல்ராம்பட்டு கிராமத்தில் சுமார் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயில், ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாக பூஜைகள் நடைபெற்றது.
வியாழக்கிழமை காலை 9 மணியளவில் மஹா பூர்ணாகுதி, தீபாராதனை மற்றும் கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு, கோயிலை வலம் வந்து குடமுழுக்கு விழா நடைபெற்றது. கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோயில் அர்ச்சகர் ரமேஷ் குருக்கள் கும்பாபிஷேத்தை நடத்தி வைத்தார். இதில் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஆனந்தன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.