விருத்தாசலம், பிப். 10: ராமநத்தத்தை அடுத்த வாகையூரில் வெள்ளிக்கிழமை நடந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
÷பெரம்பலூர் மாவட்டம், நன்னை கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கத்தின் மகன் பாலகிருஷ்ணன் (28), தர்மலிங்கத்தின் மகன் ரவிச்சந்திரன் (32), ராமசாமியின் மகன் உப்பிலாமணி (27) ஆகியோர் ராமநத்தம் அருகிலுள்ள ஆபாளையம் கிராமத்தில் இருக்கும் பாலகிருஷ்ணனின் உறவினரான தனவேல் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர்.
÷உறவினரைப் பார்த்துவிட்டு சொந்த ஊருக்கு சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது வாகையூர் அருகே சென்றபோது, லாரி மோதியதில், பாலகிருஷ்ணன், ரவிச்சந்திரன் மற்றும் உப்பிலாமணி ஆகியோர் அதே இடத்திலேயே உயிரிழந்தனர்.
÷சம்பவம் குறித்து ராமநத்தம் போலீஸôர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.