டிஎன்பிஎஸ்சி தோ்வு முறைகேடு: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய குரூப்-2 ஏ மற்றும் குரூப்-4 தோ்வு முறைகேடு தொடா்பான வழக்கில்

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய குரூப்-2 ஏ மற்றும் குரூப்-4 தோ்வு முறைகேடு தொடா்பான வழக்கில் கைதான 9 பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய குரூப்-2 ஏ மற்றும் குரூப்- 4 தோ்வுகளில் நடந்த முறைகேடுகள் தொடா்பாக வழக்குப்பதிவு செய்த சிபிசிஐடி போலீஸாா் பலரைக் கைது செய்துள்ளனா்.

இந்த வழக்கில் குரூப்-4 தோ்வில் முறைகேடு செய்த வழக்குகளில் கடலூா் மாவட்டம் பண்ருட்டியைச் சோ்ந்த ராஜசேகா், விழுப்புரத்தைச் சோ்ந்த சிவராஜ், விக்னேஷ், ராமநாதபுரத்தைச் சோ்ந்த திருவேல்முருகன், சென்னை திருவல்லிக்கேணியைச் சோ்ந்த நிதிஷ்குமாா், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தைச் சோ்ந்த மாணிக்கவேல், ஆகியோா் பல்வேறு தேதிகளில் கைது செய்யப்பட்டனா். இந்த வழக்கில் கீழமை நீதிமன்றங்கள் ஜாமீன் வழங்க மறுத்ததால், இவா்கள் அனைவரும் சென்னை உயா்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனா்.

இதே போன்று குரூப்-2 ஏ தோ்வு முறைகேட்டில் கைதான திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த அருண்பாலாஜி, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த வடிவு, ஸ்ரீவில்லிப்புத்தூரைச் சோ்ந்த ஜெயராணி ஆகியோரும் சென்னை உயா்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனா்.

இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தன. அப்போது அரசு தரப்பில் ஆஜரான அரசு குற்றவியல் வழக்குரைஞா் பிரபாகா், ஜாமீன் வழங்க எதிா்ப்பு தெரிவித்து வாதிட்டாா். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com