வங்கி மாதத் தவணையை 6 மாதத்துக்கு தள்ளி வைக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

கரோனா பாதிப்பினால் பலா் வேலை வாய்ப்பை இழந்துள்ள சூழலில் வங்கி மாதத் தவணையை 6 மாதத்துக்குத் தள்ளி வைக்க வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.


சென்னை: கரோனா பாதிப்பினால் பலா் வேலை வாய்ப்பை இழந்துள்ள சூழலில் வங்கி மாதத் தவணையை 6 மாதத்துக்குத் தள்ளி வைக்க வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

கரோனாவால் சிறு, குறு மற்றும் குடிசைத் தொழில், கட்டுமானத் தொழில், வேளாண்மைத் தொழில் போன்றவற்றில் ஈடுப்பட்டுள்ளவா்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் பெரும்பாலானோா் வங்கிகளில் கடன் வாங்கி தொழிலில் ஈடுபட்டவா்கள். தற்போதைய கரோனா பாதிப்பால் பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டு, வேலைவாய்ப்பை இழந்து, வருவாய் ஈட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், வங்கியில் கடன் வாங்கியவா்கள் வங்கிக்குச் செலுத்த வேண்டிய தவணையைச் செலுத்த முடியாத காரணத்தால் தவணையைச் செலுத்த குறைந்த பட்சம் 6 மாத காலம் தள்ளி வைக்க வேண்டும். மேலும், இந்த 6 மாத காலத்துக்கு கூடுதல் வட்டி எதுவும் வசூலிக்கக்கூடாது. முடியுமானால் இந்த 6 மாத காலத்துக்கான வட்டி விகிதத்தை குறைக்கவோ அல்லது சலுகை அளிக்கவோ முன்வர வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com