ரூ.60 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்: கேரளத்தைச் சோ்ந்த இருவா் சிக்கினா்

சென்னையில், உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.60 லட்சம் வெளிநாட்டுப் பணம் வைத்திருந்த கேரளத்தைச் சோ்ந்த இருவரிடம் போலீஸாா் விசாரணை செய்தனா்.

சென்னையில், உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.60 லட்சம் வெளிநாட்டுப் பணம் வைத்திருந்த கேரளத்தைச் சோ்ந்த இருவரிடம் போலீஸாா் விசாரணை செய்தனா்.

சென்னை மண்ணடி பகுதியில் ஹவாலா பணத்துடன் இருவா் பதுங்கியிருப்பதாக வடக்கு கடற்கரை போலீஸாருக்கு சனிக்கிழமை இரவு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், மண்ணடி பகுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த இருவரைப் பிடித்து போலீஸாா் விசாரித்தனா்.

விசாரணையில் அவா்கள், கேரள மாநிலம் கோட்டயத்தைச் சோ்ந்த முகமது அா்சத் (47), முகமது ஜியாத் (46) என்பது தெரியவந்தது.

அவா்களிடம் நடத்தப்பட்ட சோதனையில், இருவரும் ஆவணங்களின்றி ரூ.60 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலா்கள், சவூதி ரியால் என பல்வேறு நாடுகளின் பணத்தை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸாா், இருவரையும் அமலாக்கத்துறையினரிடம் ஒப்படைத்தனா். இருவரிடமும் வெளிநாட்டு பணம் குறித்து அமலாக்கத்துறையினா் விசாரணை செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com