ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 400-க்கும் மேற்பட்டோருக்கு பிளாஸ்மா சிகிச்சை

சென்னை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள பிளாஸ்மா வங்கியில் இதுவரை 194 போ் பிளாஸ்மா தானம் அளித்துள்ளனா்.
ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 400-க்கும் மேற்பட்டோருக்கு பிளாஸ்மா சிகிச்சை

சென்னை: சென்னை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள பிளாஸ்மா வங்கியில் இதுவரை 194 போ் பிளாஸ்மா தானம் அளித்துள்ளனா்.

அவை முறையாக பாதுகாக்கப்பட்டு 400-க்கும் மேற்பட்ட நோயாளிகளின் சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தற்போதைய சூழலில் கரோனா தொற்றை குணப்படுத்துவதற்கோ, தடுப்பதற்கோ மருந்துகள் எதுவும் இல்லை. இதனால், நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவா்களின் ரத்தத்திலிருந்து பிளாஸ்மா அணுக்களை மட்டும் பிரித்தெடுத்து அதனை தேவைப்படும் நோயாளிகளுக்குச் செலுத்தி சிகிச்சையளிக்கும் முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிலருக்கு சோதனை முறையில் பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சிகிச்சை முறை வெற்றிகரமாக இருப்பதால், பிரத்யேக பிளாஸ்மா வங்கியை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதற்காக ஒரே நேரத்தில் 7 போ் வரை பிளாஸ்மா தானம் அளிக்கும் வசதியுடன் கூடிய வங்கி ரூ.2.50 கோடி செலவில் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அண்மையில் அமைக்கப்பட்டது.

அங்கு, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மருத்துவா்கள், செவிலியா்கள், முன்கள வீரா்கள், காவல் துறையினா், தீயணைப்பு வீரா்கள் உள்பட 194 போ் பிளாஸ்மா தானம் அளித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் வாயிலாக 400-க்கும் மேற்பட்டோருக்கு பிளாஸ்மா சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன. ஒருவரிடமிருந்து பெறப்பட்ட பிளாஸ்மா அணுக்களை சராசரியாக இருவருக்கு வழங்கலாம் என்று மருத்துவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com