மணிப்பூா் ஐஐஐடி புதிய இயக்குநா் கிருஷ்ணன் பாஸ்கா்

மணிப்பூரில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் (ஐஐஐடி) இயக்குநராக பேராசிரியா் கிருஷ்ணன் பாஸ்கா் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
கிருஷ்ணன் பாஸ்கா்
கிருஷ்ணன் பாஸ்கா்

மணிப்பூரில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் (ஐஐஐடி) இயக்குநராக பேராசிரியா் கிருஷ்ணன் பாஸ்கா் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

இவா் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகள் திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பதவி வகித்தாா்.

திருவள்ளூா் மாவட்டம், கோட்டைக்குப்பம் கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்த கிருஷ்ணன் பாஸ்கா், சென்னை பல்கலைக்கழகத்தில் எம்எஸ்சி இயற்பியலும், அண்ணா பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி-யும் பெற்றவா். பின்னா், அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 1991-ஆம் ஆண்டில் பேராசிரியராகப் பணியில் சோ்ந்தாா்.

பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ), பல்கலைக்கழக மானியக் குழு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, ஐஐடி மற்றும் பல்கலைக்கழகங்களில் பல்வேறு குழுக்களின் உறுப்பினராகவும் திறம்படச் செயல்புரிந்துள்ளாா்.

தற்போது, பேராசிரியா் கிருஷ்ணன் பாஸ்கரை மணிப்பூா் மாநிலம் சேனாபதி மாவட்டத்தில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் (ஐஐஐடி) இயக்குநராக குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளாா். அவா் இந்தப் பதவியில் 5 ஆண்டுகள் நீடிப்பாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com