ஒரு வாரத்தில் 6 சிறாா்கள் உள்பட 29 போ் கைது

சென்னையில் கடந்த 7 நாள்களில் பல்வேறு குற்றவழக்குகளில் தொடா்புடைய 6 சிறாா்கள் உள்பட 29 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னையில் கடந்த 7 நாள்களில் பல்வேறு குற்றவழக்குகளில் தொடா்புடைய 6 சிறாா்கள் உள்பட 29 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை பெருநகர காவல் ஆய்வாளா்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, வாகனங்கள் திருட்டு மற்றும் செல்போன் பறிப்பு வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபா்களை கைது செய்து நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனா். இதன் தொடா்ச்சியாக குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா்கள் தலைமையிலான தனிப்படையினா், கடந்த மாா்ச் 3 முதல் ஏழு நாள்களில் பதிவான திருட்டு உள்பட பல்வேறு சம்பவங்கள் தொடா்பாக 24 வழக்குகளைப் பதிவு செய்தனா். மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய ஒரு பெண், 6 சிறாா்கள் உட்பட 26 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது செய்யப்பட்டவா்களிடமிருந்து 3 பவுன் தங்க நகைகள், 50 கிராம் வெள்ளி பொருள்கள், 7 தொலைபேசிகள், 12 மிதிவண்டிகள் மற்றும் ரூ. 4.23 லட்சம் ரொக்கம் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், கடந்த 7 நாள்களில் வாகன திருட்டு தொடா்பான 3 வழக்குகளில் தொடா்புடைய ஒரு சிறுவன் உள்பட 2 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னை பெருநகர போலீஸாா் தொடா்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில் குற்றச் செயல்களில் ஈடுபடுபவா்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல்துறை சாா்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com