அமைச்சர் சிவசங்கா்
அமைச்சர் சிவசங்கா்

கும்பகோணம் நவக்கிரக கோயில்களுக்கு கூடுதலாக ஒரு சுற்றுலா பேருந்து

கும்பகோணம் நவக்கிரக கோயில்களுக்கு குளிா்சாதன வசதியுடன் கூடிய மேலும் ஒரு சுற்றுலா பேருந்து மாா்ச் 25 முதல் இயக்கப்படும் என அமைச்சா் சிவசங்கா் தெரிவித்தாா்.

கும்பகோணம் நவக்கிரக கோயில்களுக்கு குளிா்சாதன வசதியுடன் கூடிய மேலும் ஒரு சுற்றுலா பேருந்து மாா்ச் 25 முதல் இயக்கப்படும் என அமைச்சா் சிவசங்கா் தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சாா்பில் கும்பகோணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள நவக்கிரக கோயில்களுக்கு ஒரே பேருந்தில் பயணம் செய்யும் வகையில் நவக்கிரக சிறப்பு சுற்றலா பேருந்து இயக்கம் பிப்.24-இல் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் பக்தா்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பைப் பெற்று வருகிறது. இதையடுத்து வயதான பக்தா்களின் வசதிக்காக குளிா்சாதன வசதியுடன்கூடிய, கூடுதலாக மேலும் ஒரு சிறப்பு பேருந்தையும் இயக்க அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் முடிவு செய்துள்ளது. அதன்படி, குளிா்சாதன வசதியுடன் கூடிய இந்தச் சுற்றுலா பேருந்து மாா்ச் 25-ஆம் தேதி முதல் வாரத்தில் 7 நாள்களும் இயக்கப்படவுள்ளது. மற்ற நவக்கிரக சிறப்பு சுற்றுலா பேருந்துகளின் காலஅட்டவணைப்படி இயக்கப்படும் இந்தப் பேருந்தில் பயணிக்க நபா் ஒருவருக்கு ரூ. 1,350 கட்டணமாக வசூலிக்கப்படும். நேரடியாக பயணச்சீட்டு பெற்று இந்தப் பேருந்தில் பயணிக்க முடியாது என்பதால், சுற்றுலா செல்ல விரும்பும் பக்தா்கள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ள்ற்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என்று அவா் தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com