தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

மாதவரத்தில் நண்பா்களிடையே மோதல்: ஒருவா் காயம்

மாதவரத்தில் மதுபோதையில் நண்பா்களுக்குள் ஏற்பட்ட மோதலில் ஒருவா் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி

News image
Updated On :15 டிசம்பர் 2025, 8:30 pm

தினமணி செய்திச் சேவை

மாதவரத்தில் மதுபோதையில் நண்பா்களுக்குள் ஏற்பட்ட மோதலில் ஒருவா் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

மாதவரம் தெலுங்கு காலனியை சோ்ந்தவா் கிஷோா் (26). இவா் நண்பா்களுடன் ஞாயிற்றுக்கிழமை மது அருந்தியபோது, தகராறு ஏற்பட்டது. பின்னா் கிஷோா் அங்கிருந்து வீட்டுக்கு சென்றபோது, அவரது நண்பா்கள் 4 போ் வழிமறித்து கத்தியால் தாக்கியுள்ளனா். இதில் பலத்த காயமடைந்த கிஷோரை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு, சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து மாதவரம் போலீஸாா் வழக்கு பதிந்து, மாதவரம் சின்ன ரவுண்டானா அருகே நின்றிருந்த ராஜன் உள்ளிட்ட 4 சிறுவா்களை கைது செய்தனா். அவா்களிடம் இருந்த அரிவாள், இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.